Uyirai Ariyum Vingyanam
Description:
“என்றேனும் வந்துபோகும் விருந்தாளியாக இல்லாமல், ஆனந்தம் உங்கள் இணைபிரியா நண்பனாக இருக்கவேண்டும் எனும் நோக்கத்தில் இப்புத்தகம் வழங்கப்பட்டிருக்கிறது. இதில் நான் உங்களுக்கு வழங்குவது போதனைகள் அல்ல, விஞ்ஞானம் மட்டுமே. பாடங்கள் அல்ல, தொழிற்நுட்பம் மட்டுமே. நெறிமுறைகள் அல்ல, பாதை மட்டுமே.” – சத்குரு
சத்குரு தனது ஆச்சரியமான பல ஆன்மீக அனுபவங்களை இங்கு விவரித்திருக்கிறார். அத்துடன், வாழ்க்கையை எப்படி புதிதாய் அணுகுவது என்பதிலிருந்து, கண்டிப்பு, ஒழுக்கநெறி போன்ற குறுகிய வட்டத்திலிருந்து வெளிவந்து, எப்படி பிறருடன் அன்புடனும் இணைந்தும் செயலாற்றுவது என்பது வரை, தேவையான நடைமுறைப் பயிற்சிகளோடும் விளக்கியிருப்பது இப்புத்தகத்தின் சிறப்பு.
– டெக்கான் ஹெரால்டு பத்திரிக்கை (இந்த புத்தகத்தின் மூல நூலான Inner Engineering – A Yogi’s Guide to Joy என்னும் ஆங்கில நூல் குறித்த மதிப்புரையிலிருந்து)
“தன் உள்ளார்ந்த அனுபவங்களின் அடிப்படையில் சத்குரு வழங்கும் கண்ணோட்டங்கள் நம்மை வசீகரிக்கிறது. நீங்கள் தயாராக இருந்தால், இப்பிரபஞ்ச சக்தியின் பிம்பமாக உங்களுக்குள் செயல்படும் அந்த உச்சபட்ச புத்திசாலித்தனத்தை, இது விழித்தெழச் செய்யும்.”
– தீபக் சோப்ரா, பிரபல அமெரிக்க எழுத்தாளர்.